எய்ட்சுக்கு மருந்து இஸ்லாம் மட்டுமே!
"பதினைந்து வயதுக்கு உட்பட்ட 70,000 குழந்தைகள் ஹெச்.ஐ.வி. எனும் வைரஸால் பாதிக்கப் பட்டுள்ளார்கள்; அதாவது எய்ட்ஸ் எனும் கொடிய நோய்க்கு ஆளாகியுள்ளார்கள்''
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடந்த 25.08.07 அன்று இதை ராஜ்யசபாவில் அறிவித்தார்.
இந்தியாவில் மட்டுமல்ல! உலகெங்கும் உள்ள சிறு குழந்தைகள் இன்றைக்கு
எய்ட்சுக்குப் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். உலகில் ஹெச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட
38.6 மில்லியன் மக்களில் இந்தக் குழந்தைகளும் விதிவிலக்கல்ல!
இதில் வேதனை என்னவெனில் இந்தத் தீமை எப்படி ஏற்பட்டது என்பதை
இந்த உலகம் இன்னும் உணராமல் இருப்பது தான். பாதுகாப்பான உடலுறவுக்குக் காண்டத்தை உபயோகியுங்கள்
என்று வானொலி,
தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வதிலிருந்து
இதைப் புரிந்து கொள்ளலாம்.
"பாதுகாப்பான உடலுறவுக்குத் திருமணமே சிறந்த வழி'' என்று சொன்னால் அதன் மூலம் விபச்சாரம் தவிர்க்கப்படுவதுடன் எய்ட்ஸ்
நோய் பரவுவதும் தடுக்கப்படும். இப்படி அறிவிப்பதை விட்டு விட்டு, பாதுகாப்பான உறவுக்கு காண்டத்தைப் பயன்படுத்துங்கள் என்று, அதாவது காண்டம் அணிந்து விபச்சாரம் செய்யுங்கள் என இன்று வரை
அரசாங்கம் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட விளம்பரம் தொடர்ந்து கொண்டு போனால் எய்ட்ஸின் பாதிப்பும்
தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.
உலகில் உள்ள மனிதனை எந்த இயற்கை நியதியில் படைத்தானோ அந்த இறைவனின்
நியதிப்படி நடக்காத வரை எய்ட்ஸ் நோய் போன்ற கொடிய நோய்கள் பரவுவதைத் தடுக்க முடியாது.
உலகில் உள்ள மார்க்கங்களில் இஸ்லாத்தைப் போன்று வேறு எந்த மதமும், விபச்சாரத்திற்குக் கடுமையான தண்டனையை விதிக்கவில்லை.
இஸ்லாமிய ஆட்சியில் மண முடிக்காத ஒரு ஆணோ அல்லது பெண்ணோ விபச்சாரம்
செய்து விட்டால் அவருக்கு 100 கசையடிகள் கொடுத்து நாடு கடத்த
வேண்டும்.
மணம் முடித்த ஆணோ, பெண்ணோ விபச்சாரம்
செய்தால் அவரைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்.
இது தான் விபச்சாரத்திற்கு இஸ்லாம் வழங்கும் தண்டனையாகும்.
விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி
அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால்
அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவர்
தண்டிக்கப் படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.
அல்குர்ஆன் 24:2
நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்த போது அஸ்லம்
குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, "நான் விபச்சாரம் செய்து விட்டேன்'' என்று சொன்னார்.
உடனே நபி (ஸல்) அவர்கள் அவரை விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.
உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபச்சாரம் புரிந்து
விட்டதாக) நான்கு தடவை ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.
ஆகவே நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து, "உனக்கு என்ன பைத்தியமா?'' என்று கேட்டார்கள்.
பிறகு, "உனக்குத் திருமணம் ஆகி விட்டதா?'' என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார்.
எனவே அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டு சென்று அவருக்குக்
கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
அவர் மீது கற்கள் விழுந்த போது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட
ஆரம்பித்தார். பாறைகள் நிறைந்த (அல்லாஹர்ரா எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு மரண
தண்டனை வழங்கப்பட்டார்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 5270
உலகில் எய்ட்ஸ் ஏற்படுத்தும் பாதிப்புகளை உணர்ந்தவர்கள், சிந்தனையாளர்கள் அனைவரும், விபச்சாரத்திற்கு
இத்தகைய தண்டனை வழங்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இந்தச் சட்டத்தைத் தங்கள் நாடுகளில்
அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட முன்வைக்கின்றனர்.
இது போன்ற ஒரு சிறப்பான சட்டம் உலகெங்கும் நடைமுறையில் இருக்குமானால்
இந்தக் கொடிய நோயை விட்டும் மக்கள் பாதுகாக்கப்பட்டிருப்பார்கள்.
விபச்சாரத்திற்கு இவ்வளவு கடுமையான தண்டனையை இஸ்லாம் ஏற்படுத்தியிருக்கும்
அதே வேளையில் திருமணத்திற்குரிய வழிகளை மிகவும் எளிதாக்கி இருக்கின்றது.
அத்துடன் மனிதர்களின் பாலுணர்வுத் தேவையை, தேட்டத்தை உணர்ந்து அவர்களுக்குப் பலதார மணத்தையும் அனுமதிக்கின்றது.
பொதுவாக ஓர் ஆணுக்கு அவனுடைய பாலுணர்வுத் தேட்டம் ஒரு பெண் என்ற
வட்டத்தில் நிற்பதில்லை. இரண்டு, மூன்று என்று அவனது தேட்டம்
இருக்கும்.
மனிதனின் இயற்கை சுபாவத்தை உணர்ந்த இயற்கை மார்க்கமான இஸ்லாம், நான்கு பெண்களை ஒருவர் திருமணம் முடிக்கலாம் என்ற அனுமதியை வழங்குகின்றது.
உன்னுடைய தேவையை இந்த வரையறைக்குள் வைத்துக் கொள்! இந்த வரம்பைத்
தாண்டாதே! எய்ட்ஸ் போன்ற கடுமையான நோய்களை வரவழைத்துக் கொள்ளாதே! என்று இந்த இயற்கை
மார்க்கம் கூறுகின்றது.
அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால்
உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! நேர்மையாக நடக்க மாட்டீர்கள்
என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக்
கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.
அல்குர்ஆன் 4:3
உலகில் இஸ்லாமிய மார்க்கம், அதாவது
இயற்கை மார்க்கம் மட்டும் மனிதனின் தேவையை அறிந்து, அதற்கான
தீனியைக் கொடுத்து பசியைத் தணிக்கிறது.
அதையும் மீறி வேலி தாண்டினால் கடுமையாகத் தண்டிக்கிறது. எய்ட்ஸ்
போன்ற கொடிய நோய்கள் மனிதனைத் தாக்காமல் தடுத்துக் காக்கிறது.
EGATHUVAM SEP 2007