காதியானிகள் வரலாறு - 1
காதியானிகள் யார்?
எம்.ஐ. சுலைமான்
நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு ஏராளமான பொய்யர்கள்
உருவானார்கள். அவர்கள் இஸ்லாத்தையும் அதன் கொள்கைகளையும் அழிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தனர்.
அந்த வகையில் வந்தவர்கள் தான் காதியானிகள்.
நபிகளாருக்குப் பிறகு நானும் நபியே என்று வாதிட்ட பொய்யன் மிர்சா
குலாம் அஹ்மத் என்பவனை நபியாக ஏற்றவர்கள் காதியானிகள்.
காதியானி என்பது பஞ்சாபில் உள்ள ஒரு ஊரின் பெயராகும். மிர்சா
என்ற இவன் இந்த ஊரைச் சார்ந்தவன் என்பதால் இவனுடைய கொள்கை காதியானி (காதியான் என்ற
ஊரைச் சார்ந்தவனுடைய) கொள்கை என்ற பெயர் வந்தது.
இவனுடைய இயற்பெயர் மிர்சா குலாம் அஹ்மது. இவன் கி பி 1835 ஆம் ஆண்டு பிறந்தான். 1908 ஆம் ஆண்டு
இறந்தான். இவனைப் பின்பற்றுபவர்கள் தம்மை அஹ்மதிய்யாக்கள் என்று கூறிக் கொள்வார்கள்.
இவனுடைய கொள்கை இஸ்லாத்துக்கு எப்படி விரோதமானது என்பதைப் பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு இறைத்தூதர்கள் வருவார்களா?
உலக மக்கள் அனைவருக்கும் நபிகள் நாயகமே இறைத்தூதர்
உலகம் அழியும் வரை உள்ள எல்லா மக்களுக்கும் இறைத்தூதராக நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களையே அல்லாஹ் அனுப்பியுள்ளான் என்பதை திருக்குர்ஆன் மிகத் தெளிவாக
விவரிக்கிறது.
يَاأَيُّهَاالنَّاسُ إِنِّي
رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا [الأعراف/158]
மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராவேன்.
அல்குர்ஆன் 7:158
உலக மக்கள் அனைவருக்கும் உரிய திருக்குர்ஆனில் முழு மனித குலத்தையும்
அழைத்து, பின்வருமாறு கூறுமாறு நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا
رَحْمَةً لِلْعَالَمِينَ [الأنبياء/107]
(முஹம்மதே!)
அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.
அல்குர்ஆன் 21 : 107
وَمَا أَرْسَلْنَاكَإ ِلَّا
كَافَّةً لِلنَّاسِ بَشِيرًاوَنَذِيرًاوَلَكِنَّ أَكْثَرَالنَّاسِ لَا يَعْلَمُونَ
[سبأ/28]
(முஹம்மதே!)
நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள்
அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
அல்குர்ஆன் 34:28
{تَبَارَكَ الَّذِي نَزَّلَ
الْفُرْقَانَ عَلَى عَبْدِهِ لِيَكُونَ لِلْعَالَمِينَ نَذِيرًا} [الفرقان:1]
தனது அடியார் மீது (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும்
வழி முறையை அவர் அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்யக் கூடியவராக ஆவதற்காக அருளியவன் பாக்கியமானவன்.
அல்குர்ஆன் 25:1
அகிலாத்தார் அனைவருக்கும் நபிகளார்தான் எச்சரிக்கை செய்ய முடியும்.
வேறு யாரும் இறைத் தூதராக வந்து எச்சரிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதையும் இவ்வசனம்
தெளிவுபடுத்துகிறது.
335 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ
سِنَانٍ هُوَ الْعَوَقِيُّ قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ حوحَدَّثَنِي سَعِيدُ بْنُ
النَّضْرِ قَالَ أَخْبَرَنَاهُشَيْمٌ قَالَ أَخْبَرَنَا سَيَّارٌ قَالَ حَدَّثَنَا
يَزِيدُ هُوَ ابْنُ صُهَيْبٍ الْفَقِيرُ قَالَ أَخْبَرَنَا جَابِرُ بْنُ عَبْدِاللَّهِ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أُعْطِيتُ خَمْسًا لَمْ
يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ وَجُعِلَتْ لِي
الْأَرْضُمَسْجِدًا وَطَهُورًا فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلَاةُ
فَلْيُصَلِّ وَأُحِلَّتْ لِي الْمَغَانِمُ وَلَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي وَأُعْطِيتُ
الشَّفَاعَةَ وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى
النَّاسِ عَامَّةً رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத் தூதர்கள்) எவருக்கும் வழங்கப்படாத
ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்ட்டுள்ளன.
1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையில்) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும்
அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.
2. தரை முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும், தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என் சமுதாயத்தாரில்
யாருக்காவது தொழுகையின் நேரம் வந்துவிட்டால் (அவருக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால்
அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில் தயம்மும் செய்துகொள்ளட்டும்.) தொழுதுகொள்ளட்டும்.
3. போரில் கிடைக்கும் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத்தூதர்கள்) எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.
4. (மறுமையில் என் சமுதாயத்தாருக்காக) பரிந்துரை செய்யும் வாய்ப்பு
கொடுக்கப்பட்டுள்ளேன்.
5. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூகத்திற்கு மட்டுமே தூதராக அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான், மனித இனம் முழுவதற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.
அறிவிப்பவர் ; ஜாபிர் பின்
அப்தில்லாஹ் (ரலி)
நூல் : புகாரி 335
ஒவ்வொரு இறைத்தூதர்களும் அந்தச் சமுதாய மக்களுக்கு மட்டும் அனுப்பப்பட்ட
நிலையில் நபிகளார் மட்டும்தான் உலகம் முழுமைக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள்
என்பதை நபிகளாரின் இந்தப் பொன்மொழி ஐயத்திற்கிடமின்றி விளக்கிறது.
கியாமத் நாள் வரை வருகின்ற மக்களுக்கும் நபிகள் நாயகம் தான்
நபி
حَدَّثَنِي يُونُسُ بْنُ
عَبْدِ الْأَعْلَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ وَأَخْبَرَنِي عَمْرٌو أَنَّ أَبَا
يُونُسَ حَدَّثَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ أَنَّهُ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَا يَسْمَعُ بِي أَحَدٌ
مِنْ هَذِهِ الْأُمَّةِ يَهُودِيٌّ وَلَا نَصْرَانِيٌّ ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ
بِالَّذِي أُرْسِلْتُ بِهِ إِلَّا كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ رواهم مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக!
இந்தச் சமுதாயத்திலுள்ள யூதரோ, கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர்
என்னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும் கூட நான் கொண்டு வந்ததை நம்பிக்கை கொள்ளாமல்
இறந்து விட்டால், அவர் நரகவாசிகளில் ஒருவராகவே
இருப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 240
கியாமத் நாள் வரை எச்சரிக்கை செய்பவர்
قُلْ أَيُّ شَيْءٍ أَكْبَرُ
شَهَادَةً قُلِ اللَّهُ شَهِيدٌ بَيْنِي وَبَيْنَكُمْ وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآَنُ
لِأُنْذِرَكُمْ بِهِ وَمَنْ بَلَغَ أَئِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ اللَّهِ آَلِهَةً
أُخْرَى قُلْ لَا أَشْهَدُ قُلْ إِنَّمَا هُوَ إِلَهٌ وَاحِدٌ وَإِنَّنِي بَرِيءٌ مِمَّا
تُشْرِكُونَ [الأنعام/19]
"மிகப் பெரும் சாட்சியம் எது?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! "எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே சாட்சியாளன். இந்தக் குர்ஆன் மூலம்
உங்களையும்,
இதை அடைவோரையும் நான் எச்சரிக்கை செய்வதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது' எனக் கூறுவீராக! "அல்லாஹ்வுடன் வேறு கடவுள்கள் இருப்பதாக
சாட்சி கூறுகிறீர்களா? நான் (அவ்வாறு) சாட்சி கூற மாட்டேன்'' என்று நீர் கூறுவீராக! "வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவனே.
நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் நான் விலகிக் கொண்டவன்'' எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 6 : 19
இந்த குர்ஆன் யாரை எல்லாம் சென்றடைகிறதோ அவர்கள் அனைவருக்கும்
நபிகளார் தான் இறைத்தூதராக இருந்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதுதான் இறைவனின்
கட்டளை.
முஹம்மது நபிக்குப் பிறகு எந்த நபியும் கிடையாது
و حَدَّثَنَا أَبُو بَكْرِ
بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا غُنْدَرٌ عَنْ شُعْبَةَ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ
الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا
شُعْبَةُ عَنْ الْحَكَمِ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ سَعْدِ
بْنِ أَبِي وَقَّاصٍ قَالَ خَلَّفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فِي غَزْوَةِ تَبُوكَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ تُخَلِّفُنِي
فِي النِّسَاءِ وَالصِّبْيَانِ فَقَالَ أَمَا تَرْضَى أَنْ تَكُونَ مِنِّي بِمَنْزِلَةِ
هَارُونَ مِنْ مُوسَى غَيْرَ أَنَّهُ لَا نَبِيَّ بَعْدِي حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ
بْنُ مُعَاذٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا شُعْبَةُ فِي هَذَا الْإِسْنَادِ رواه مسلم
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரின்போது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை (தாம் திரும்பி
வரும்வரை தமக்குப்) பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், "குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை
விட்டுச் செல்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், "மூசாவிடம் ஹாரூனுக்கு இருந்த
அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு யாதெனில்) எனக்குப்
பிறகு எந்த நபியும் இல்லை'' என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்லிம் 4777
3455 حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ
بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ فُرَاتٍ الْقَزَّازِ
قَالَ سَمِعْتُ أَبَا حَازِمٍ قَالَ قَاعَدْتُ أَبَا هُرَيْرَةَ خَمْسَ سِنِينَ فَسَمِعْتُهُ
يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَتْ بَنُو
إِسْرَائِيلَ تَسُوسُهُمْ الْأَنْبِيَاءُ كُلَّمَا هَلَكَ نَبِيٌّ خَلَفَهُ نَبِيٌّ
وَإِنَّهُ لَا نَبِيَّ بَعْدِي وَسَيَكُونُ خُلَفَاءُ فَيَكْثُرُونَ قَالُوا فَمَا
تَأْمُرُنَا قَالَ فُوا بِبَيْعَةِ الْأَوَّلِ فَالْأَوَّلِ أَعْطُوهُمْ حَقَّهُمْ
فَإِنَّ اللَّهَ سَائِلُهُمْ عَمَّا اسْتَرْعَاهُمْ رواه البخاري
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: "பனூ இஸ்ராயீல்களை
நிர்வகிப்பவர்களாக இறைத்தூதர்கள் இருந்தனர். இறைத்தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம்
மற்றோர் இறைத்தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத்தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர்
தோன்றுவார்கள்''
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 3455
நபிகளாரே இறைத் தூதர்களில் இறுதியானவர்
இறைத்தூதர்களில் நபிகளார் தான் கடைசித் தூதர் என்பதால் அவர்களுக்கு
ஆகிப் (இறுதியானவர்) என்ற பெயரும் இருக்கிறது.
4342 حَدَّثَنِي زُهَيْرُ بْنُ
حَرْبٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَابْنُ أَبِي عُمَرَ وَاللَّفْظُ لِزُهَيْرٍ
قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا و قَالَ الْآخَرَانِ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ
عَنْ الزُّهْرِيِّ سَمِعَ مُحَمَّدَ بْنَ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ أَنَّ
النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَنَا مُحَمَّدٌ وَأَنَا أَحْمَدُ
وَأَنَا الْمَاحِي الَّذِي يُمْحَى بِيَ الْكُفْرُ وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ
النَّاسُ عَلَى عَقِبِي وَأَنَا الْعَاقِبُ وَالْعَاقِبُ الَّذِي لَيْسَ بَعْدَهُ نَبِيٌّ رواه مسلم
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள், "எனக்கு (ஐந்து) பெயர்கள்
உள்ளன. நான் "முஹம்மத்' (புகழப்பட்டவர்) ஆவேன். நான்
"அஹ்மத்'
(இறைவனை அதிகமாகப் புகழ்பவர்) ஆவேன். நான்
"மாஹீ'
(அழிப்பவர்) ஆவேன்; என் மூலம் அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கின்றான். நான் "ஹாஷிர்' (ஒன்றுதிரட்டுபவர்) ஆவேன்; மக்கள்
என் பாதங்களுக்குக் கீழே (என் தலைமையில்) ஒன்று திரட்டப்படுவார்கள். நான் "ஆகிப்' (இறுதியானவர்) ஆவேன்; எனக்குப் பிறகு
வேறெந்த இறைத்தூதரும் இல்லை'' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 4697
நபிமார்களில் முத்திரையானவர்
مَا كَانَ مُحَمَّدٌ أَبَا
أَحَدٍ مِنْ رِجَالِكُمْ وَلَكِنْ رَسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ
اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا [الأحزاب/40]
முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை.
மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும்
இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் 33 : 40
2145حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا
حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ
عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا
تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ وَحَتَّى
يَعْبُدُوا الْأَوْثَانَ وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي ثَلَاثُونَ كَذَّابُونَ
كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي
قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
رواه الترمدي
போலி இறைத்தூதர்களைப் பற்றிய நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளையும், பொய் நபியான மிர்சா என்பவன் நபி என்பதற்கு காதியானிகள் வைக்கும்
ஆதாரங்களையும்,
அதற்குரிய பதில்களையும் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதில் பார்க்கலாம்.
EGATHUVAM JUN 2016