May 23, 2017

ஊர் விஷயத்தில் உறுதியான நிலைப்பாடு - 2

ஊர் விஷயத்தில் உறுதியான நிலைப்பாடு - 2

நபி (ஸல்) அவர்கள் "நஜ்த்பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் "பனூ ஹனீஃபாகுலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்பவரைக் கைது செய்து வந்தார்கள். பள்ளிவாசலின் தூணில் அவரைக் கட்டிப் போட்டார்கள். மூன்று நாளுக்குப் பிறகு அவர் நபிகளாரால் மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு நடந்த சம்பவத்தைப் பாருங்கள்.

ஸுமாமாபள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டுபள்ளிவாசலுக்கு வந்து, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லைஎன்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், "முஹம்மதுஅல்லாஹ்வின் தூதர்என்றும் நான் உறுதி கூறுகிறேன்'' என்று மொழிந்துவிட்டு, "முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தை விட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால்இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரை விட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால்இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகி விட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர்'' என்று சொல்லிவிட்டு, "மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?'' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதி அளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்ற போது (அங்கே) ஒருவர் அவரிடம், "நீ மதம் மாறி விட்டாயா?'' என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், "இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாகஅல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறி விட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும் வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புஹாரி (4372)

நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும் வரை எனது நாடான யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட மக்காவாசிகளான உங்களுக்கு வராது” என்ற வார்த்தையை உற்றுக் கவனியுங்கள்.

இந்த உறுதி நம்மிடம் இருக்கிறதாஊர் ஜமாஅத்தாக இருந்தாலும் மார்க்கத்திற்குப் புறம்பான செயல்களுக்கு ஒத்த ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என்று சொல்ல நிறைய பேருக்கு தைரியம் இல்லை.

என்னதான் இருந்தாலும் ஊர் ஜமாஅத்தை விட்டும் விலகி விடக்கூடாது என்று கெட்டியாக ஒட்டிக் கிடக்கிறார்கள். இணைவைப்புபித்அத் குறித்து அறிந்திருந்தும் ஊர்ப் பற்று என்ற பெயரில் கந்தூரி விழாமவ்லூதுமீலாது போன்றவற்றில் கலந்து கொள்கிறார்கள்.

தடம்புரள வைக்கும் ஊர்ப்பற்று
ஊர்களை மையமாக வைத்துப் பெரும் சண்டைகள் நடக்கின்றன. மூடநம்பிக்கைகள்பெரும்பாவங்கள் குறித்துப் பிரச்சாரம் செய்தால்கருத்துச் சொன்னால் வெளியூர்காரன் பேசக்கூடாது என்கிறார்கள். உள்ளூர்க்காரர்கள் அடித்துக் கொள்வோம்சேர்ந்துக் கொள்வோம்நீங்கள் தலையிடக் கூடாது என்கிறார்கள்.

எது சரியானது என்பதைக் காட்டிலும்எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதையே கவனிக்கிறார்கள். இப்படி மதீனாவாசிகள் கேள்வி கேட்டிருந்தால் மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி அமைந்திருக்குமாஎன்று சிந்தித்துப் பாருங்கள்.

நபிகளாரிடம் பயிற்சி பெற்ற நபித்தோழர்களையே ஊர் நினைப்பு தடுமாற வைத்துள்ளது.

நபியவர்கள் இறந்துபோன தருணம்அவர்கள் இறக்கவே இல்லை எனும் கருத்தில் சிலர் இருந்தனர். அப்போது அங்கு வந்த அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆனில் இருக்கும் 39:30 மற்றும் 3:144 ஆகிய இரு வசனங்களை ஓதிக்காட்டி. நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதைப் புரிய வைத்தார்கள். அதன் பிறகு நடந்த நிகழ்வைக் காண்போம்.

உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டை அடைக்க) விம்மி அழுதார்கள். அன்சாரிகள் (தமது) "பனூ சாஇதாசமுதாயக் கூடத்தில் ஒன்றுகூடி (தம் தலைவர்) சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம், " "எங்களில் ஒரு தலைவர்உங்களில் ஒரு தலைவர் (ஆக இருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம்என்று முஹாஜிர்களிடம் சொல்வோம்)'' என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அபூபக்ர்உமர் பின் கத்தாப்அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) ஆகியோர் (ஆட்சித் தலைவரை முடிவு செய்ய) அன்சாரிகளிடம் வந்தனர். உமர் (ரலி) அவர்கள் பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் மௌனமாக இருக்கச் சொல்லி விட்டார்கள். (இதைப் பிற்காலத்தில் நினைவு கூரும் போது) உமர் அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பேச முயன்றது எதற்காக என்றால்நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன். அபூபக்ர் அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். அதனால் தான் நான் பேச முயன்றேன்'' என்று கூறி வந்தார்கள்.

பிறகுஅபூபக்ர் (ரலி) அவர்கள் பேசினார்கள். மக்களிலேயே உரை நயம் மிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள். அவர்கள் தம் பேச்சில், "(குறைஷிகளாகிய) நாங்கள் ஆட்சித் தலைவர்களாக இருப்போம்; (அன்சாரிகளான) நீங்கள் அமைச்சர்களாக இருங்கள்'' என்று சொன்னார்கள். உடனே, (அன்சாரியான) ஹுபாப் பின் முன்திர் (ரலி) அவர்கள், "இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். எங்கள் இடையேயிருந்து ஒரு தலைவரும் உங்கள் இடையேயிருந்து ஒரு தலைவரும் (தேர்ந்தெடுத்துக் கொள்வோம்)” என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "இல்லைநாங்களே தலைவர்களாக இருப்போம். நீங்கள் அமைச்சர்களாக இருங்கள். ஏனெனில்குறைஷிகள் தாம் அரபுகளில் சிறந்த ஊரை (மக்காவை)ச் சேர்ந்தவர்களும்சிறந்த செயல்திறன் மிக்கவர்களும் ஆவர். ஆகவேஉமர் பின் கத்தாப்அல்லது அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்'' என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், "இல்லைநாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்எங்களில் சிறந்தவர்எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள்'' என்று சொல்லிவிட்டுஅவர்களுடைய கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல் : புஹாரி 3667, 3668

மக்காவைச் சேர்ந்த முஹாஜிர்களுக்கு ஒரு தலைமைமதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளுக்கு வெறொரு தலைமை என்று இந்தச் சமூகம் பிரிந்து சிதைந்து போகும் அபாயம் ஏற்பட்டது. அவர்கள் சுதாரித்துக் கொண்டதால் நிலைமை சீரானது. யோசித்துப் பாருங்கள்! இதற்குக் காரணம்நம் ஊர்நம் ஊர்வாசிநமக்கான அரசு என்று சிலர் யோசித்ததின் விளைவு என்பதை மறுக்க முடியுமா?

நியாயம் யார் பக்கம் இருக்கிறதோ அவர்களுக்கு ஆதரவாக நிற்கவேண்டுமே தவிரதவறு செய்தவர் நமது ஊரைச் சார்ந்தவர் என்பதால்அவருக்குத் துணைபோகக் கூடாது. ஊர் மோகம் கொண்டு நிதானத்தையும்நியாயத்தையும் இழந்துவிடக் கூடாது. அது நம்மைத் தடம்புரளச் செய்துவிடும்வழிகெடுத்து விடும்.

ஊர் வழக்கத்தை ஒழித்த இஸ்லாம்
ஊர்க் கட்டுப்பாடு என்ற பெயரில் பல அராஜகங்கள் நடக்கின்றன. இன்றும் பிறமத மக்கள் வாழும் ஊர்களில் தாழ்ந்த சாதி மக்களுக்கென ஊரில் ஒரு பகுதியை ஒதுக்கி இருப்பார்கள். ஊரைப் பிரித்து வைத்திருப்பார்கள். இவர்கள் மேல்சாதி மக்கள் வசிக்கும் பகுதியில் குடியேற முடியாது.

இது போன்ற நடவடிக்கை மக்கத்து முஷ்ரிக்குகளிடம் வேறு வடிவில் இருந்தது. ஹஜ்ஜின் போது மக்கள் அனைவரும் ஒன்பதாம் நாள் அன்று அரஃபா திடலில் தங்குவது வழக்கம். இதற்கு மாறாகஉயந்த குலம் என்று சொல்லப்பட்ட குறைஷிகள் மட்டும் முஸ்தலிபா எனும் இடத்தில் தங்குவார்கள். காரணம்முஸ்தலிபா என்பது கஅபாவின் எல்லைக்கு உள்ளேயும்அரஃபா என்பது அதற்கு வெளியேயும் அமைந்திருக்கும். இது ஒதுக்கப்பட்ட மக்களுக்கான இடமாகக் கருதப்பட்டது.

இந்த ஊர் வழக்கத்தை இஸ்லாம் உடைத்து எறிந்தது. ஹஜ் கிரியைகள் செய்யும் அனைவரும் ஒன்பதாம் நாள் "அரஃபாதிடலில் இருக்க வேண்டும் என்று 2:199 வசனத்தின் மூலம் இஸ்லாம் பிரகடனம் செய்தது. சமத்துவத்தை நிலைநாட்டியது.

(அறியாமைக் காலத்தில் ஹஜ்ஜின் போது) குறைஷியரும்அவர்களுடைய மதத்தவர்களும் முஸ்தலிஃபாவிலேயே தங்கிவிடுவார்கள். (ஹரம் - புனித எல்லையை விட்டு வெüயேற மாட்டார்கள்.) அவர்கள் (இந்த விஷயத்தில்) "உறுதிமிக்கவர்கள்எனப் பெயரிடப்பட்டுவந்தனர். மற்ற அரபுகள் அனைவருமே அரஃபாத்தில் தங்கி வந்தார்கள். இஸ்லாம் வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (துல்ஹஜ் 9ஆவது நாளில்) அரஃபாத் சென்றுஅங்கே தங்கியிருந்துவிட்டு அங்கிருந்தே திரும்ப வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டான். அந்தக் கட்டளைதான் "மக்கள் அனைவரும் திரும்புகின்ற இடத்திலிருந்து நீங்களும் திரும்புங்கள்'' எனும் (2:199ஆவது) இறை வசனமாகும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புஹாரி 4520

அன்புக்குரிய சகோதரசகோதரிகளே! ஊர் வழக்கம்ஊர்க் கட்டுப்பாடு என்ற தோற்றத்தில் மார்க்க நெறிமுறைகளைத் தகர்க்கும் வகையில் எந்தவொரு செயல் இருப்பினும் அதற்குக் கட்டுப்படாதீர்கள். அவற்றை உதைத்துத் தள்ளுங்கள். அந்தச் சட்டங்களுக்கு ஒருபோதும் உடந்தையாகி விடாதீர்கள்.

ஊரின் எதிர்ப்பு உறுதியைத் தரட்டும்
சொந்த ஊரிலே மார்க்கப்படி தைரியாமாகச் செயல்படும் சிலர்வெளியூருக்குச் சென்றால் தங்கள் வழிபாட்டு முறையையே மாற்றிக் கொள்கிறார்கள். இதுபோன்றுஉள்ளூரில் கொள்கையை மறைத்து கமுக்கமாக இருப்பவர்கள்வெளியூரில் மட்டும் ஏகத்துவவாதியாக அறிவித்துக் கொண்டு வீரியத்துடன் ஈடுபடுகிறார்கள்.

இப்படி நம்முடைய மார்க்க கருத்துக்களை ஊருக்குத் தோதுவாக திரிக்கவோவளைக்கவோ கூடாது. ஊருக்கு ஏற்ப வேடம்போடக் கூடாது. ஏகத்துவமே என் வழிமுறை என்று எங்கும் பகிரங்கப்படுத்தத் தயங்கும் நபர்கள் பின்வரும் செய்திகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அபூதர் (அல்கிஃபாரீ) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட செய்தி எட்டியபோதுமக்காவிற்கு வந்து நபிகளாரைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அதையடுத்த நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வோம்வாருங்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூதர் (ரலி) அவர்களிடம், "நீங்கள் உங்கள் "கிஃபார்குலத்தாரிடம் திரும்பிச் சென்று என் கட்டளை உங்களிடம் வந்துசேரும் வரை (இஸ்லாத்தின் செய்தியை) அவர்களுக்குத் தெரிவியுங்கள்'' என்று சொன்னார்கள்.

அபூதர் (ரலி) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த ஏக இறை)வன் மீது சத்தியமாக! நான் இந்தச் செய்தியை (மக்கா இறைமறுப்பாளர்களான) இவர்களிடையேயும் உரக்கச் சொல்வேன்'' என்று சொல்விட்டு, (கஅபா) பள்ளிவாசலுக்கு வந்துஉரத்த குரலில் "அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும்முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்றும் நான் உறுதிமொழிகிறேன்'' என்று கூறினார்.

உடனே அங்கிருந்த (குறைஷி) மக்கள்கொதித்தெழுந்துஅவரை அடித்துக் கீழே சாய்த்தனர். அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்துஅவர் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல் தடுத்து)க் கொண்டார்கள். "உங்களுக்குக் கேடு உண்டாகட்டும்! இவர் "கிஃபார்குலத்தைச் சேர்ந்தவர் என்பதும்உங்கள் வணிகர்கள் செல்லும் வழி (கிஃபார் குலத்தார் வசிக்கும்) ஷாம் (சிரியா) நாட்டுப் பாதையில்தான் உள்ளது என்பதும் உங்களுக்குத் தெரியாதா?'' என்று சொல்லி அவர்களிடமிருந்து அபூதர் (ரலி) அவர்களைக் காப்பாற்றினார்கள்.

அபூதர் (ரலி) அவர்கள் அடுத்த நாள் மீண்டும் (பள்ளிவாசலுக்குச் சென்று) அதே போன்று (உரத்த குரலில் உறுதிமொழி) சொல்லஅவர் மீது பாய்ந்து (குறைஷியர்) தாக்கினர். (அன்றும்) அப்பாஸ் (ரலி) அவர்கள் அபூதர் (ரலி) அவர்கள் மீது கவிழ்ந்து படுத்து (அடி விழாமல்) அவரைக் காப்பாற்றினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: முஸ்லிம் 3522, 4879

அல்லாஹ்வின் அனுமதியோடு நபியவர்கள் தமது தாவா பணியை இரகசியமாகச் செய்து வந்த போதுநம்பிக்கையை மறைத்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட போது இந்தச் சம்பவம் நடந்தது. ஆனால்இன்று ஊரிலே சகல உரிமையையும் வாய்ப்பையும் பெற்றிருக்கும் நிலையில் இந்த உறுதி நம்மிடம் இருக்கிறதாமார்க்கப் பாதையை விட்டு சறுகிக் கிடக்கும் ஊர் ஜமாஅத்திற்கு எதிராக வாய் திறப்பதற்கு எத்தனை பேருக்குத் துணிவு இருக்கிறதுஇதே கேள்வியும் படிப்பினையும் கீழிருக்கும் செய்தியிலும் இருக்கிறது.

மக்காவில் முஸ்லிம்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளானபோதுஅபூபக்ர் (ரலி) அவர்கள் அபிசீனியாவை நோக்கிநாடு துறந்து சென்றார்கள். யமன் செல்லும் வழியில் "பர்குல் கிமாத்என்னும் இடத்தை அடைந்த போது இப்னு தஃகினா என்பவர்ஆபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்தார். அவர்களின் நற்காரியங்களைக் குறிப்பிட்டு ஊர் திரும்புமாறு கேட்டுக் கொண்டார். அபூபக்ர் (ரலி) அவர்களுடன் இப்னு தஃகினாவும் ஊர் திரும்பினார். அவர் குறைஷிகளைச் சந்தித்து அபூபக்ர் அவர்களின் பண்புகளை நினைவுடுத்திவிட்டு அவருக்கு அடைக்கலம் அளிப்பதாகக் கூறினார். இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியைப் படியுங்கள்

…(அபூபக்ர் அவர்களுக்கு அளித்த) இப்னு தஃகினாவின் அடைக்கலத்தை குறைஷிகள் மறுக்கவில்லை. அவர்கள் இப்னு தஃகினாவை நோக்கி, "அபூபக்ர்தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வணங்கவோதொழுகவோதாம் விரும்பியதை ஓதவோ செய்யட்டும். ஆனால்இவற்றின் மூலம் எங்களுக்கு இடையூறு செய்யவோஇவற்றை பகிரங்கமாகச் செய்வதோ கூடாது. ஏனெனில் எங்கள் மனைவி மக்கள் (அவரது வணக்க வழிபாட்டு முறைகளைப் பார்த்து) குழப்பமடைந்து விடுவார்களோ என்று நாங்கள் அஞ்சுகிறோம் என்று அவரிடம் கூறிவிடுங்கள்'' என்று சொன்னார்கள். அ(வர்கள் கூறிய)தை இப்னு தஃகினா அபூபக்ர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தார். அதன்படி அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது இல்லத்திற்குள் தம்முடைய இறைவனை வணங்கியும்தமது தொழுகையை பகிரங்கப் படுத்தாமலும் தமது வீட்டுக்கு வெளியில் (திருக்குர்ஆன் வசனங்களை) ஓதாமலும் (அவர்கள் விதித்த நிபந்தனைப்படி) இருந்து வந்தார்கள்.

பிறகு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு (மாற்று யோசனை) தோன்றியது. தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அதில் தொழுது கொண்டும் திருக்குர்ஆனை ஓதியும் வந்தார்கள். அப்போதுஇணை வைப்பவர்களின் மனைவியரும் மக்களும் அபூபக்ர் அவர்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு (அவர்களைச் சூழ்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதற்காக) அவர்கள் மீது முண்டியடித்து விழுந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் குர்ஆன் ஓதும் போது தமது கண்களை கட்டுப்படுத்த முடியாமல் (கண்ணீர் உகுத்த வண்ணம்) அதிகமாக அழக்கூடியவராக இருந்தார்கள்.

(அபூபக்ர் அவர்களின்) இந்த நடவடிக்கை (எங்கே தங்களது இளகிய இதயம் படைத்த மனைவி மக்களை மதம் மாறச் செய்து விடுமோ என்ற அச்சம்) இணைவைப்பவர்களான குறைஷிகளைப் பீதிக்குள்ளாக்கியது. அதனால் அவர்கள் இப்னு தஃகினாவிடம் ஆளப்பினர். அவரும் குறைஷிகளிடம் வந்தார். அப்போது அவர்கள், "அபூபக்ர் தமது இல்லத்திற்குள்ளேயே தமது இறைவனை வழிபட்டுக் கொள்ளட்டும் என்று (நிபந்தனையிட்டு) அவருக்கு நீங்கள் அடைக்கலம் தந்ததன் பேரிலேயே நாங்கள் அவருக்கு அடைக்கலம் தந்தோம். அவர் அதை மீறி விட்டு தமது வீட்டு முற்றத்தில் தொழுமிடம் ஒன்றை உருவாக்கி அந்த இடத்தில் பகிரங்கமாக தொழுது கொண்டும், (குர்ஆனை) ஓதிக் கொண்டும் இருக்கிறார். நாங்கள் எங்கள் மனைவி மக்கள் குழப்பத்திற்குள்ளாகி விடுவார்களோ என்று அஞ்சுகிறோம். எனவே அபூபக்ரைத் தடுத்து வையுங்கள். அவர் அவரது இறைவனை தமது இல்லத்தில் வணங்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ள விரும்பினால் அவ்வாறு செய்யட்டும். அவர் அதை மறுத்து பகிரங்கப்படுத்தவே செய்வேன் என்றால் அவரிடம் உமது (அடைக்கலப்) பொறுப்பைத் திரும்பத் தருமாறு கேளுங்கள். ஏனெனில், (உங்களது உடன்பாட்டை முறித்து) உங்களுக்கு நாங்கள் மோசடி செய்வதை வெறுக்கிறோம். (அதே சமயம்) அபூபக்ர் (அவற்றை) பகிரங்கமாகச் செய்ய நாங்கள் அனுமதிப்போராகவும் இல்லை'' என்று கூறினர்.

இப்னு தஃகினா அபூபக்ர் அவர்களிடம் வந்து, "நான் எ(ந்)த (நிபந்தனையி)ன் பேரில் உங்களிடம் ஒப்பந்தம் செய்தேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். ஆகவே ஒன்றுஅதனோடு மட்டும் நீங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அல்லது எனது (அடைக்கலப்) பொறுப்பை என்னிடம் திரும்பத் தந்து விடவேண்டும். ஏனென்றால் நான் உடன்படிக்கை செய்து கொண்ட ஒரு மனிதரின் விஷயத்தில் நான் ஏமாற்றப்பட்டேன் என்று அரபுகள் கேள்விப்படுவதை நான் விரும்ப மாட்டேன் ''என்று கூறினார். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "உமது அடைக்கலத்தை உம்மிடமே திரும்பத் தந்து விடுகிறேன். வல்லவனும் கண்ணிய மிக்கவனுமான அல்லாஹ்வின் அடைக்கலம் குறித்து நான் திருப்திப்படுகிறேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புஹாரி (3905)

ஊரின் அழிவை அஞ்சுவோம்
சில மக்கள்ஊரில் அதிகமான பேர் இருக்கும் அணியிலே தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களின் கொள்கைக் கோட்பாடு எப்படி இருக்கிறது என கொஞ்சமும் சிந்திப்பது இல்லை. மார்க்கத்தைத் தூக்கியெறியும் விரோதப் போக்கு கொண்டவர்களுடன் சேர்ந்து இயங்குகிறார்கள். ஏகத்துவத்தை எதிர்த்துக் குரல் எழுப்புகிறார்கள். இவர்கள் எந்த ஊருக்காக உண்மையை உதறித் தள்ளுகிறார்களோ அது அழியக் கூடியதுஅற்பமானது என்பதை உணரட்டும். அல்லாஹ் எத்தனையோ ஊர்களை அழித்திருக்கிறான். இது குறித்த நிறைய வசனங்கள் திருமறையில் இருக்கின்றன. அவற்றைப் படித்த பிறகாவது உன்னதமான தீனை விடவும் ஊரே முக்கியமென தப்புக் கணக்குப் போடுவதை நிறுத்திக் கொள்ளட்டும்.

உங்களைச் சுற்றி பல ஊர்களை அழித்துள்ளோம். இவர்கள் திருந்துவதற்காக சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.
திருக்குர்ஆன் 46:27

(அழிக்கப்பட்ட) அவ்வூர்களைச் சேர்ந்தோர் நம்பிக்கை கொண்டு (நம்மை) அஞ்சியிருந்தால் வானிலிருந்தும்பூமியிருந்தும் பாக்கியங்களை அவர்களுக்காக திறந்து விட்டிருப்போம். மாறாக அவர்கள் பொய்யெனக் கருதினர். எனவே அவர்கள் (தீமை) செய்து வந்ததன் காரணமாக அவர்களைத் தண்டித்தோம்.

திருக்குர்ஆன் 7:94-96

அவர்கள் இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் போது நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களாஅவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது முற்பகல் நமது வேதனை அவர்களுக்கு வரும் என்பதில் அவ்வூரார் அச்சமற்று இருக்கிறார்களா?

திருக்குர்ஆன் 7:97-99


ஊர் மீதான பாசமோ பயமோ ஒருபோதும் நமது மார்க்கப்பற்றை மிகைத்து விடக் கூடாது. அல்லாஹ்வுக்கு அஞ்சி அழகிய முறையில் மார்க்கத்தைப் பின்பற்றுவோம். ஊருக்கும் உலகத்திற்கும் ஏற்ப கொள்கையில் சமரசம் செய்யாமல்மார்க்க ஆதாரங்களுக்கு ஏற்ப வாழ்வை அமைத்துக் கொள்வோம். அல்லாஹ்வை மட்டும் வணங்குவோம்முஹம்மது நபியை மட்டும் பின்பற்றுவோம். மரணிக்கும் வரை தவ்ஹீத் வழியிலே பயணத்தைத் தொடர்வோம். அல்லாஹ்வின் அருளும் உதவியும் நிச்சயம் கிடைக்கும். ஊராரின் சூழ்ச்சிகளும் இடைஞ்சல்களும் தூள்தூளாக உடைந்து போய்விடும். அசத்தியம் அழிந்து சத்தியம் வெல்லும். உலக வாழ்வில் மட்டுமல்ல! மறுமையிலும் வெற்றிபெற இறைவன் நமக்கு உதவிபுரிவானாக.


EGATHUVAM JUNE - 2016