May 23, 2017

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 26 - இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்? 26 - இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

தொடர்: 26

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா



قال الغزالي: وفي خبر آخر: "من غش أمتي فعليه لعنة الله والملائكة والناس أجمعين، قيل يا رسول الله، وما غش أمتك، قال: أن يبتدع بدعة يحمل الناس عليها".

قال العراقي: أخرجه الدارقطني في الأفراد من حديث أنس بسند ضعيف جدا

எனது சமுதாயத்தில் யார் ஏமாற்றுகின்றாரோ அவர் மீது அல்லாஹ், மலக்குகள், மக்கள் அனைவரின் சாபம் உண்டாகட்டுமாக!என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சமுதாயத்தின் ஏமாற்றுதல் என்ன?” கேட்கப்பட்டது. மார்க்கத்தில் ஒரு பித்அத்தை உருவாக்கி அதை நோக்கி மக்களைத் தூண்டுவது என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸை, கல்வியின் ஆபத்துகள் என்ற ஆறாவது பாடத்தில் கஸ்ஸாலி கொண்டு வருகின்றார்.

ஹாபிழ் இராக்கி அவர்கள் இந்த ஹதீஸைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

அல்அஃப்ராத் என்ற நூலில் மிகவும் பலவீனமான அறிவிப்புத் தொடருடன் அனஸ் (ரலி) வழியாக இமாம் தாரகுத்னீ பதிவு செய்துள்ளார்கள். ஆனால் அதில் கெட்ட பித்அத்தை உருவாக்கி அதன்படி செயல்படுகின்றாரோஎன்று இடம் பெறுகின்றது.

இப்னு ஸுப்கி, இதற்கு நான் எந்த அறிவிப்புத் தொடரையும் காணவில்லை என்று தெரிவிக்கின்றார்கள்

நூல்: தக்ரீஜுஅஹாதீஸுல்இஹ்யா

விமர்சனம்:

கஸ்ஸாலி கொண்டு வந்திருக்கின்ற மிகவும் பலவீனமான இந்த ஹதீஸ் பித்அத்தை ஒழிப்பதற்குப் பெரிதும் உதவுகின்ற ஓர் அருமையான ஹதீஸாகும். ஆனால் அது மிகவும் பலவீனமான ஹதீஸ் என்பதால் அதைப் பயன்படுத்தும்போது இதை ஆதாரமாகக் காட்டுபவர் புகாரி 1291ன் படி நரகத்தை முன்பதிவு செய்தவராவார்.

قال الغزالي: وقال رسول الله صلى الله عليه وسلم: "إن لله عز وجل ملكا ينادي كل يوم من خالف سنة رسول الله صلى الله عليه وسلم لم تنله شفاعته".

قال العراقي: لم أجد له أصلا

ரசூல் (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு யார் மாறு செய்கின்றாரோ அவர் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையைப் பெற மாட்டார் என்று அல்லாஹ் நியமித்திருக்கும் மலக்கு தினந்தோறும் சொல்லிக் கொண்டிருக்கின்றார். இவ்வாறு ரசூல் (ஸல்) கூறினார்கள்.

இவ்வாறு ஒரு ஹதீஸை கஸ்ஸாலி மேற்கண்ட (கல்வியின் ஆபத்துகள்) பாடத்தில் கொண்டு வருகின்றார். இந்த ஹதீஸிற்கு எந்த ஒரு அடிப்படையையும் நான் காணவில்லை என்று ஹாபிழ் இராக்கி தெரிவிக்கின்றார்கள்.

இப்னுஸ்ஸுபுக்கி அவர்கள் இதற்கு நான் எந்த அடிப்படையும் காணவில்லை என்று தெரிவிக்கின்றார்கள்.

நூல்: தக்ரீஜ்அஹாதீஸ்இஹ்யா

விமர்சனம்:

இந்த ஹதீஸ் ஒரு வாதத்திற்குச் சரியான ஹதீஸ் என்றாலும் இதைக் கஸ்ஸாலி போன்றவர்கள் குறிப்பிடுவதற்குத் தகுதி கிடையாது. காரணம் இஸ்லாத்தில் இல்லாத எத்தனையோ பித்அத்துகளை நுழைப்பதற்குக் காரணமானவர்களில் அவரும் ஒருவர்.

சூஃபிய்யத் என்ற பெயரில் சுன்னத் என்ற நபிவழிக்கு மாற்றமான பல வழிமுறைகள மார்க்கத்தில் கண்மூடித்தனமாகப் புகுத்தியவர்களில் முன்னோடியானவர் அவர். பித்அத்திற்கு வக்காலத்து வாங்குகின்ற வக்கீலாகவும் செயல்பட்டவர்.

قال الغزالي: وقال صلى الله عليه وسلم: "عليكم بالنمط الأوسط الذي يرجع إليه العالي، ويرتفع إليه التالي".

قال العراقي: أخرجه أبو عبيد في غريب الحديث موقوفا على علي بن أبي طالب، ولم أجده مرفوعا



நடுநிலையான பாதையைக் கடைப்பிடியுங்கள். அது, வரம்பு கடந்து மேலே சென்றவர் திரும்புகின்ற பாதையும், கீழே உள்ளவர் மேல் நோக்கி உயர்கின்ற பாதையுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படி ஒரு ஹதீஸை மேற்கண்ட (கல்வியின்ஆபத்துகள்) பாடத்தில் கஸ்ஸாலி கொண்டு வருகின்றார்.

இதை அபூ உபைத் அவர்கள் கரீபுல் ஹதீஸ் என்ற நூலில் பதிவு செய்துள்ளார். ஆனால் இதை, நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இல்லாமல், அலீ (ரலி) கூறுவதாகப் பதிவு செய்துள்ளார் என்று ஹாபிழ் இராக்கி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இப்னுஸ்ஸுபுக்கி அவர்களும் ஹாபிழ் இராக்கியைப் போன்றே குறிப்பிடுகின்றார்கள்.

விமர்சனம்:

கல்விக் கடல் என்று சூஃபிஸ சிந்தனைவாதிகள் கஸ்ஸாலியைத் தாங்கிப் பிடிக்கின்றார்கள்.

கடுகளவு அறிவு உள்ளவர்கள் கூட அலீ (ரலி) அவர்களின் கூற்றை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகச் சொல்ல மாட்டார். ஆனால் கடலளவு அறிவுள்ள கஸ்ஸாலி, அலீ (ரலி) சொன்னதை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறுகின்றார்.

அதாவது ஒரு வீட்டு மாட்டைப் பிடித்து இன்னொருவர் வீட்டில் கட்டி வைத்திருக்கின்றார். இவர் எப்படி அறிஞராக இருக்க முடியும்? என்று இந்த சூஃபிஸ பேர்வழிகள் சிந்திக்க மறுக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் சொல்லாத ஹதீஸ்களை இஹ்யாவில் தாறுமாறாக எழுதித் தள்ளிய கஸ்ஸாலியை கல்விக் கடல், ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளுகின்றார்கள்.



قال الغزالي: قال صلى الله عليه وسلم: "الشيخ في قومه كالنبي في أمته".

قال العراقي: أخرجه ابن حبان في الضعفاء من حديث ابن عمر، وأبو منصور الديلمي من حديث أبي رافع بسند ضعيف



கூட்டத்தின் தலைவர் சமுதாயத்தின் நபியைப் போன்றவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

என்று கஸ்ஸாலி ஒரு ஹதீஸை அறிவு, அதன் சிறப்பு, அதன் தன்மை என்ற ஏழாவது பாடத்தில் கொண்டு வருகின்றார்.

இந்த ஹதீஸை இப்னு உமர் (ரலி) வழியாக இப்னு ஹிப்பான் அவர்கள் லுஆஃபாவிலும் பலவீனமான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டு அபூராஃபிஃ வழியாக அபூமன்சூர் தைலமீ அவர்களும் பதிவு செய்துள்ளார்கள் என்று ஹாபிழ் இராக்கி தெரிவிக்கின்றார்கள்

இப்னு ஹஜரும் மற்ற அறிஞர்களும் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்பதில் உறுதிகொண்டார்கள். இது கண்டிப்பாக முன்னாள் உள்ள அறிஞர்களுடைய சொல்லாகத்தான் இருக்க வேண்டும்.

மக்கள் ஒரு நபியிடத்தில் கல்வி கற்பது போன்றும் ஒழுக்கம் படிப்பது போன்றும் ஜமாஅத் தலைவர் மக்களிடம் நபியைப் போன்றிருக்கின்றார் என்று வாசகம் அமைந்திருக்கக் கூடும். அது தான் இப்படி மாறிப் போயிருக்கலாம். எப்படி இருந்தாலும் இது பொய்யான செய்தியாகும் என இமாம் சகாவி, தனது மகாஸித் என்ற நூலில் தெரிவிக்கின்றார்.

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யாவிடம் இந்த ஹதீஸ் பற்றி கேட்கப்பட்டபோது இதற்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை என்று குறிப்பிட்டார்கள். இவ்வாறு ஹாபிழ் இராக்கி தெரிவிக்கின்றார்கள்.

قال الغزالي: وقال صلى الله عليه وسلم: "يا أيها الناس اعقلوا عن ربكم وتواصوا بالعقل تعرفوا ما أمرتم به، وما نهيتم عنه، إلى أن قال: وأن الجاهل من عصى الله تعالى وإن كان جميل المنظر، عظيم الخطر، شريف المنزلة، حسن الهيئة".

قال العراقي: أخرجه داود بن المجبر أحد الضعفاء في كتاب العقل من حديث أبي هريرة وهو في مسند الحارث بن أبي أسامة عن داود



மக்களே! உங்களுடைய இறைவனை அறிவால் அறிந்து கொள்ளுங்கள். அறிவு மூலம் ஒருவொருக்கொருவர் அறிவுரை வழங்குங்கள். நீங்கள் எதை ஏவப்பட்டிருக்கின்றீர்கள், எதை விட்டும் தடுக்கப்பட்டிருக்கின்றீர்கள் என்று விளங்கிக் கொள்வீர்கள். கவர்ச்சிமிகு தோற்றமானவனாகவும், பிரமாதமான சிந்தனை உள்ளவனாகவும் சிறந்த அந்தஸ்து உள்ளவானாகவும் உடல்வாகு அழகானவனாகவும் இருந்தாலும் அறிவிலி அல்லாஹ்வுக்கு மாறுசெய்து விட்டான். என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

இவ்வாறு கஸ்ஸாலி இதே பாடத்தின் கீழ்கொண்டு வருகின்றார்.

தாவூத் பின் முஜ்பிர் என்பவர் பலவீனமான அறிவிப்பாளர். அவரே இந்த ஹதீஸை அறிவு என்ற பாடத்தில் அபூஹுரைரா (ரலி) வழியாக பதிவு செய்துள்ளார். இந்தப் பாடம் தாவூத் வழியாக முஸ்னத் அல்ஹாரிஸ் பின் உஸாமா என்ற நூலில் வந்துள்ளது என ஹாபிழ் இராக்கி கூறுகின்றார்.



قال الغزالي: ومنه قوله صلى الله عليه وسلم: "إن المسجد لينزوي من النخامة كما تنزوي الجلدة على النار".

قال العراقي: لم أجد له أصلا.

நெருப்பினால் தோல் சுருண்டு விடுவது போன்று சளியினால் பள்ளிவாசல் சுருண்டு விடுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

கஸ்ஸாலி இந்த ஹதீஸை நேர்வழியின் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாகச் செல்தல் என்ற பாடத்தில் கொண்டு வருகின்றார்.

ஹாபிழ் இராக்கி அவர்கள் இதற்கு நான் எந்த அடிப்படையையும் காணவில்லை என்று குறிப்பிடுகின்றார்.

قال الغزالي: وقال صلى الله عليه وسلم فيما يروي في بعض الأخبار: "الإيمان يزيد وينقص".

قال العراقي: أخرجه ابن عدي في الكامل، وأبو الشيخ في كتاب الثواب من حديث أبي هريرة، وقال ابن عدي باطل فيه محمد بن أحمد بن حرب الملحي يتعمد الكذب

ஈமான் கூடுகின்றது குறைகின்றது என்று  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படி ஒரு ஹதீஸை கஸ்ஸாலி கொள்கையின் சட்டங்கள் என்ற நான்காவது பிரிவில் கொண்டு வருகின்றார்.

அபூஹுரைரா (ரலி) வழியாக அறிவிக்கப்படுகின்ற இந்த ஹதீஸை இப்னு அதீ அவர்கள் காமில் என்ற நூலிலும் அபுஷ்ஷைக் கிதாபுஸ்ஸவாப் என்ற நூலிலும் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஹதீஸின் தொடரில் முஹம்மத் பின் அஹ்மத் பின் ஹர்ப் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் திட்டமிட்டு பொய் சொல்பவர்.

அதனால் இது பொய்யான ஹதீஸ் ஆகும் என்று இப்னு அதீ கூறுவதாக ஹாபிழ் இராக்கி தெரிவிக்கின்றார்கள்.

ஈமான் கூடும் குறையும் என்ற வார்த்தையை நபிகள் நாயகம் நேரடியாகச் சொன்னதாகத் தான் எந்த ஆதாரப்பூர்வமான ஹதீசும் இல்லை.

ஆனால் ஒருவருக்கு ஈமான் கூடும், குறையும் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் பல இருக்கின்றன. கஸ்ஸாலி குறிப்பிடுகிற இந்த வாசகத்தில் எந்த ஹதீசும் இல்லை.

இந்த அளவிற்கு நபி (ஸல்) அவர்களின் ஹதீஸில் ஹதீஸ் கலை அறிஞர்கள் மிகப்பெரும் கவனத்தைக் கொண்டுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.



قال الغزالي: قال صلى الله عليه وسلم: "إن القرآن نزل بحزن، فإذا قرأتموه فتحازنوا".

قال العراقي: أخرجه أبو يعلى وأبو نعيم في الحلية من حديث ابن عمر بسند ضعيف

குர்ஆன் கவலையை அடிப்படையாகக் கொண்டு இறங்கியது. எனவே, ஓதும் போது கவலை கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படியொரு ஹதீஸை கஸ்ஸாலி குர்ஆன் ஓதுவதின் ஒழுங்குகள் என்ற தலைப்பின் கீழ் இரண்டாவது பாடத்தில் கொண்டு வருகின்றார்.

இப்னு உமர் (ரலி) வழியாக பலவீனமான தொடரைக் கொண்டு அறிவிக்கப்படுகின்ற இந்த ஹதீஸை அபூயஃலாவும் (முஸ்னத்அபீயஃலா ஹதீஸ் எண்; 689) அபூநயீம், ஹில்யாவிலும் பதிவு செய்துள்ளார்கள். இவ்வாறு ஹாபிழ் இராக்கி கூறுகின்றார்கள்.

இந்தச் செய்தியில் இஸ்மாயீல் பின் ராஃபிஃ இடம்பெறுகின்றார். இவரைப் பல அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள்.

இமாம் அஹ்மத், நஸாயீ, தாரகுத்னீ உள்ளிட்ட அறிஞர்கள் இவரை ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று குறை கூறியுள்ளார்கள்.


பார்க்க: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:1 பக்கம்: 258

EGATHUVAM JUN 2016