எல்லை மீறும் இஸ்ரேலுக்கு இறைவனின் எச்சரிக்கை!
ஃபலஸ்தீனத்தில் உள்ள மேற்குக் கரையில் யூதர்கள் 4000 குடியிருப்புகளை அமைத்துள்ளனர். இஸ்ரேல் அமைத்திருக்கும் குடியிருப்புப்
பகுதிகள், ஃபலஸ்தீன மக்களின் தனியார்களுக்குச் சொந்தமான நிலங்களாகும்.
ஆக்கிரமிக்கப்பட்ட இந்தப் பகுதிகளில் எவ்விதமான குடியமர்த்தும் பணிகளிலும் ஈடுபடக்கூடாது
என்று கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு சபை இஸ்ரேலைக் கேட்டுக் கொண்டது.
அது மட்டுமல்லாமல், அண்மையில்
அகில உலக அளவிலான ஒரு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் உலக நாடுகளிலிருந்து 70க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்டன. இந்த மாநாடு இஸ்ரேலின்
குடியமர்த்தும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையில், பலஸ்தீன், இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் பேச்சு வார்த்தைகளைத் தொடங்க வேண்டும்
என்று கேட்டுக் கொண்டது.
உலகச் சட்டங்களையும், சமாதானப் பேச்சுக்
களையும் இஸ்ரேல் எப்போது மதித்தது? எப்படி மதிக்கும்? ஐ.நா.வின் இந்த சமாதான வேண்டுகோள் தீர்மானத்தின் மை கூட உலர்ந்திருக்காது.
அதற்குள் மேற்குக் கரையில் அமைக்கப்பட்ட அந்த 4000 குடியிருப்புகளில்
அதன் உரிமையாளர்களின் பெயர் தெரியாத பட்சத்தில் அவற்றை சட்டப்பூர்வமாக சொந்தமாக்கிக்
கொள்வது என்றும், உரிமையாளர் பெயர் தெரிந்தால்
அவர்களுக்குப் பணமாக அல்லது வேறு விதமாக ஈடு கொடுப்பது என்றும் இஸ்ரேலிய நாடாளு மன்றம்
ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை அபகரிக்கும் அநியாயத்தில் இஸ்ரேல்
இறங்கியிருக்கின்றது.
ஐ.நா. சபை போன்ற உலக நிறுவனங்களின் சமாதான நடவடிக்கைகளை இஸ்ரேல்
அப்பட்டமாகக் காற்றில் பறக்க விடுவதையே இது காட்டுகின்றது. கிழக்கு ஜெருஸலம் ஆக்கிரமிக்கப்பட்ட
பிறகு இஸ்ரேலின் சட்டத்தின் வரம்பு அந்தப் பகுதியில் தலைகாட்டுவது இது தான் முதல் தடவையாகும்.
இஸ்ரேலின் ஆதிக்கப் போக்கை அந்நாட்டின் அட்டர்னி ஜெனரலாலேயே
ஜீரணிக்க முடிக்கவில்லை. இந்தச் சட்டம் தொடர்பான வழக்கு இஸ்ரேலிய உயர் நீதிமன்றத்திற்கு வரும் போது இது
அநியாயமானதும் அனைத்துலக சட்டத்திற்கு எதிரானதும் என்பதால் அதற்கு ஆதரவாக தான் வாதாடப்
போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக அது நீதிமன்றத்தால் உறுதியாக நிராகரிக்கப்பட உள்ளது.
அந்நாட்டு உயர் நீதிமன்றத்தாலேயே அது மறுக்கப்படக்கூடிய சட்டமாக இருந்தாலும் இஸ்ரேலின்
பிரதமர் நெதன்யாஹூ தனது ஆக்கரமிப்புப் படலத்தை நிறுத்துதாகத் தெரியவில்லை. மேலும் அதிகமான
நிலங்களை அபகரிக்கும் முடிவில் உள்ளார். காரணம், இந்த
ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. 50 ஆண்டுகளுக்கு முன்பு
இஸ்ரேல் மேற்குக் கரையை ஆக்கிரமித்ததிலிருந்து பலஸ்தீன் பகுதிகளில் ஆறு லட்சம் யூதர்களைக் கொண்ட 140 குடியிருப்புகளைக் கட்டியிருக்கின்றது.
இந்த அக்கிரமத்திற்கும், அநியாயத்திற்கும்
எதிராக உலக அளவிலான கண்டனங்கள் கடுமையாக இஸ்ரேலை
நோக்கிப் பாய்ந்தன. அந்தக் கண்டனங்களை அங்கு மாறி மாறி வந்த ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளவில்லை; அவற்றை சட்டை செய்யவுமில்லை. அந்தக் கண்டனங்கள் எருமை மாட்டின்
மீது பெய்த மழை போன்று ஆகிவிட்டன.
ஆக்கிரமிப்பைக் கொள்கையாகக் கொண்டு செயல்படுகின்ற அணியினருக்கு
அடுத்து அடுத்து வருகின்ற ஆட்சியாளர்கள் ஆதரவாகவே இருந்து வந்துள்ளனர். அதிலும் இப்போதைய
பிரதமர் நெதன்யாஹூ வலது சாரியின் தயவில் கூட்டணி ஆட்சி நடத்துகின்றார். அதனால் ஏற்கனவே
இருந்த ஆட்சியாளர்களைக் காட்டிலும் அதிகமாகவே அபகரிப்பு வேலையில் இறங்கியிருக்கின்றார்.
கடந்த மாதத்தில் மேற்குக் கரையில் 2500 குடியிருப்புகளுக்கு
அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு நெதன்யாஹூ அரசாங்கம் இதுவரையிலும்
எந்த ஆர்வமும் காட்டவில்லை. அவருடைய கூட்டணியில் உள்ள வலதுசாரியினரோ, இஸ்ரேல் சாம்ராஜ்யத்தை
மேற்குக் கரை வரைக்கும் - அதாவது பைபிள்
குறிப்பிடுகின்ற பெயர்களின் படி யூதேயா, சாமேரியா வரைக்கும்
- விரிவாக்கம் செய்து கொண்டிருக்கின்றோம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கின்றது
அமெரிக்காவில் முஸ்லிம் விரோதியும் காட்டுமிராண்டியுமான டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கு வந்ததும் அது இஸ்ரேலுக்கு
ஒரு முரட்டுத் துணிச்சலைக் கொடுத்துள்ளது. ஜெருஸலம் என்பது சர்ச்சைக்குரிய பகுதியாகும்.
டெல்அவிவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருஸலத்திற்கு மாற்றப் போவதாக இந்த பைத்தியக்காரன்
டிரம்ப் அறிவித்திருக்கின்றான். அத்துடன், “ஆக்கிரமிக்கப்பட்ட
பகுதிகளில் யூத குடியேற்றத்திற்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட
போது ஒபாமா அரசாங்கம் ஏன் தனது வீட்டோ அதிகாரத்தை
பயன்படுத்தி அந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்கவில்லை?” என்றும் இந்த மனிதகுல விரோதி டிரம்ப், ஒபாமாவை கடுமையாகச் சாடினான்.
அநியாயக்கார இஸ்ரேல் தான் ஆக்கிரமித்த மேற்குக் கரையில் 708 கிலோ மீட்டர்
தூரத்திற்கு தடுப்புச் சுவரை எழுப்பியுள்ளது. பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாகத் திகழும் இஸ்ரேல் இதை பயங்கரவாத தடுப்பு சுவர் என்று
வர்ணித்துக் கொள்கின்றது. ஆனால் உண்மையில் அது
இஸ்ரேலின் இரத்ததில் ஊறிப் போன இனவாதச்
சுவராகும். தன்னைப் பிற சமூகத்துடன் இணைத்து கலக்காமல் தடுத்துக் கொள்கின்ற தடுப்புச்
சுவராகும். அந்தத் தடுப்புச் சுவரையும் பயங்கரவாத
அமெரிக்காவின் குடியரசுக் கட்சி தந்த கொடிய தலைவன் டிரம்ப் பாராட்டியிருக்கின்றான்.
நெதன்யாஹூவை நோக்கி உலக நாடுகளிலிருந்து என்ன தான் கண்டனக் கணைகள்
வந்தாலும் அவற்றை உதறித் தள்ளி விட்டு, கூட்டணி ஆட்சியின் நிர்ப்பந்தத்திற்குப் பணிந்து ஆக்கிரமிப்பு வேலையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றான்.
அந்தப் பாதகன் காத்துக் கொண்டிருப்பது அமெரிக்கக்
காதகனின் பச்சைக் கொடிக்காகத் தான். கொடி அசைப்புக்கு அவனும் ஆயத்தமாகவே இருக்கின்றான். அவன் கொடியசைத்து விட்டால்
பாதிப்புக்குள்ளாவது உலக அமைதியும் அதன் நீதியும்
தான்!
இவர்களின் செயல்பாடுகள்
உலகப் பொது வேதம் உன்னதக் குர்ஆன் கூறுகின்ற அடிப்படையில் அப்படியே அமைந்திருக்கின்றன.
“அவர்கள் (இஸ்ரவேலர்கள்)
போர் (எனும்) தீயை மூட்டும் போதெல்லாம் அதை அல்லாஹ் அணைத்து விடுகின்றான். அவர்கள்
பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். குழப்பம் விளைவிப்போரை அல்லாஹ் விரும்ப மாட்டான்”
அல்குர்ஆன் 5:64
இந்த வசனம் இஸ்ரேலின் போர்த் தீயை மூட்டுகின்ற பயங்கரவாத குணத்தையும்
அவர்கள் தான் இந்தப் பூமியில் குழப்பம் விளைவிக்கின்ற குள்ள நரிக் கூட்டம் என்பதையும் படம் பிடித்துக் காட்டுகின்றது.
“அவர்கள் (யூதர்கள்)
தமது ஒப்பந்தத்தை முறித்ததால் அவர்களை சபித்தோம். அவர்களின் உள்ளங்களை இறுக்கமாக்கினோம்.”
அல்குர்ஆன் 5:13
சர்வ சாதாரணமாக இவர்கள் ஒப்பந்தத்தை மீறக் கூடியவர்கள். அவ்வப்போது
பச்சோந்திகளாக மாறக்கூடிவர்கள்; இதன் காரணமாக அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் என்று இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.
அவர்களில் அதிகமானோர் பாவத்திற்கும், வரம்பு மீறலுக்கும், தடுக்கப்பட்டதை
உண்பதற்கும் விரைந்து செல்வதை நீர் காண்பீர்! அவர்கள் செய்வது மிகவும் கெட்டது.
(அல்குர்ஆன் 5:62)
உலகத்தில் வரம்பு மீறுவதில் இவர்களை விஞ்சியவர்களும், மிஞ்சியவர்களும் வேறு யாருமில்லை என்று இந்த வசனம் விளக்குகின்றது.
இந்த யூதர்களுக்கு உலகில் எத்தனையோ தண்டனைகளை அல்லாஹ் அளித்திருக்கின்றான். கடந்த நூற்றாண்டில்
ஹிட்லர் அவர்களைக் கருவறுத்தான். அப்படியிருந்தும் அவர்கள் பாடமோ, படிப்பினையோ பெறவில்லை.
இப்போது இவர்கள் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பலஸ்தீனில் அத்துமீறி
உள்ளே நுழைந்து அவர்களது நிலங்களையும் அவ்வப்போது அபகரித்துக் கொண்டு, அவர்களுக்கு எதிராக அநீதியிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் வாக்கு இன்னும் எஞ்சியிருக்கின்றது. அப்போது இவர்களும்
இவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் கொடியவன் டிரம்ப் போன்றவர்களும் தப்பிக்க முடியாது
என்று எச்சரித்து வைக்கின்றோம். அந்த இறை வாக்கு
இது தான்.
உங்கள் இறைவன், உங்களுக்கு
அருள் புரிவான். நீங்கள் மீண்டும் (பழைய நிலைக்கு) திரும்பினால் நாமும் திரும்புவோம்.
(நம்மை) மறுப்போருக்கு நரகத்தைச் சிறைச்சாலையாக ஆக்கியுள்ளோம்.
(அல்குர்ஆன் 17:8)
அல்லாஹ் முன்பு இவர்களைப்
பிடித்து கடுமையாகத் தண்டித்ததைக் குறிப்பிட்டு விட்டு, அது மாதிரி நாம் பிடிப்போம் என்று எச்சரிக்கை விடுக்கின்றான்
என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
EGATHUVAM MAR 2017