May 31, 2017

இந்தோனேஷியாவில் இஸ்லாமிய ஷரீஆ? - நியூயார்க் டைம்ஸின் குரூரப் பார்வை

இந்தோனேஷியாவில் இஸ்லாமிய ஷரீஆ? - நியூயார்க் டைம்ஸின் குரூரப் பார்வை

ஷரீஅத் சட்டம் காலத்தின் ஒவ்வாமை, அது ஒரு கருப்பு சிந்தனைஅது ஒரு காட்டுமிராண்டித்தனம் என்று மேற்கத்தியம் பூதாகரமாக உருவாக்கிய  கருத்தாக்கம் கண்மூடித்தனமாக  உலகில் உலவிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தோனேஷியாவின் மாகாணங்களில் ஒன்றான பாண்டா அச்சேஅதை புஸ்வானமாக்கி ஒரு புரட்சி படைத்துக் கொண்டிருப்பதை ஒரு பத்திரிக்கைச் செய்தி நமக்கு புலப்படுத்துகின்றது.

ஷரீஅத் சட்டம் பற்றிய அந்நாட்டு மக்களின் புரிதலில் நமக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும்  உலகில் எந்த ஒரு பாகத்திலும் இஸ்லாமியச் சட்டம் தலை தூக்கி விடக்கூடாது என்பதில் மேற்கத்திய உலகம் எந்த அளவு குறியாக இருக்கின்றது என்பதை அடையாளங்காட்டி அம்பலப்படுத்துவதற்காக இந்த ஆக்கம் இங்கு தரப்படுகின்றது.

நியூயார்க் டைம்ஸில் வெளியான இந்தக்  கட்டுரை இந்து ஆங்கில நாளேட்டில் 14.01.2017 அன்று மறுபதிப்பு செய்யப்பட்டது. அதற்கு அவர்கள் வைத்துள்ள தலைப்பு என்ன தெரியுமா?

கினீவீபீ ஷிலீணீக்ஷீவீணீt மீஜ்ஜீமீக்ஷீவீனீமீஸீt, மிஸீபீஷீஸீமீsவீணீ’s sமீநீuறீணீக்ஷீ யீணீநீமீ sறீவீஜீs - ஷரீஅத் சட்ட சோதனைக்கு மத்தியில் இந்தோனேஷியாவின் மதச்சார்பின்மை முகம் சிதைகிறது

எந்த அளவுக்கு இவர்கள் ஷரீஅத் சட்டத்தின் மீது வெறுப்பு கொண்டுள்ளார்கள் என்பதை இந்தத் தலைப்பே நமக்கு உணர்த்துகின்றது. அந்தக் கட்டுரை இதோ:

கடற்கரைச் சாலையில் அமைந்திருக்கும் தேனீர் விடுதியில் ஒரு மாலை நேரத்தில் ஒலிபெருக்கியில் அலறுகின்ற இசைப் பாடல்கள் செவிப் பறைகளைக் கிழித்துக் கொண்டிருந்தன. இறுக்கமான ஜீன்ஸ் அணிந்த நவ நாகரீகமான கருப்புக் கண்ணாடிகள் போட்ட வாலிபக் கூட்டம் வெளியே அமர்ந்திருந்தனர். ஒரு பக்கம் தங்கள் கைகளில் உள்ள கோப்பைகளிலிருந்து தேனீரை உறிஞ்சிக் கொண்டும் மறு பக்கம் சிகரெட் ஊதிக் கொண்டும் கால்களை ஆட்டியவாறு காதுகளில் விழுகின்ற  தேனிசை மழையில் நனைந்து கொண்டிருந்தனர்.

இந்தக் கட்டத்தில் அருகில் உள்ள ஒரு பள்ளியில் மக்ரிப் தொழுகைக்கான பாங்கோசை ஒலித்தது தான் தாமதம்; பணிப் பெண் இசை பாடல்களை நிறுத்தி, அனைவரையும் ஒரு நொடிப் பொழுதில்  உள்ளே அமரச் செய்து கதவுகளை கீழிறக்கி விடுதியை உடனடியாக மூடிவிட்டாள். பாங்கு சப்தம் கேட்டபின் பள்ளிக்கு தொழுகைக்கு வராமல் பணிகளில் முடங்கிக் கிடக்கக் கூடாது என்பதற்காகத் தான்.

சுமத்ரா முனையில் சுடர்மிகு சூரியன்

இவ்வளவும் நடப்பது எங்கே? இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு சுமத்ராவில் முனையில் அமைந்திருக்கும்  பாண்டே அச்சே என்றே மாகாணத்தில் தான்! உலகத்திலேயே முஸ்லிம்கள் அதிக அளவில் வாழ்கின்ற நாடு இந்தோனேஷியாவாகும். 17,508  தீவுகளின் தொகுப்பாக அமைந்த அந்நாட்டில் 34 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் 5 மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்தைப் பெற்றவை. அத்தகைய சிறப்பு அந்தஸ்தையும் தகுதியையும் பெற்ற மாநிலம் தான் பாண்டே அச்சே!  மதச்சார்பின்மையை அரசியல் சாசனமாகக் கொண்ட இந்தினேஷியாவில் அச்சே மாநிலம் மட்டும் 2001ல் இஸ்லாமிய ஷரீஅத்தை அரசியல் சாசனமாக ஐஸ்வரித்துக் கொண்டது. இம்மாநிலம் பிரிவினை வாதச் சிந்தனையில் உள்ள மாநிலம் என்பதால் அதை மட்டுப்படுத்தவே இந்த சிறப்புச் சலுகை என்ற வாதமும் வைக்கப்படுகின்றது.

தடை விதிக்கப்பட்ட தகாத காரியங்கள்

அச்சே மாநிலத்தில் மனித குலத்தை அழித்து நாசமாக்குகின்ற ஆல்கஹால் (மது) தடை செய்யப்பட்டுள்ளது. விபச்சாரம் முதல் கொண்டு ஓரினச் சேர்க்கை, மது விற்பனை வரையிலான குற்றங்களில் ஈடுபடக் கூடியவர்களுக்கு பொது இடத்தில் சாட்டையடி கொடுக்கப்படுகின்றது. ஷரீஆ காவல் துறை அல்லும் பகலும் ரோந்து வந்து கொண்டு ஹோட்டல் விடுதி முதல் கடற்கரை வரை அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு  ஆபாசச் செயல்கள் அரங்கேறாமல்  கண்காணித்து வருகின்றது. ஒரு பதினைந்து ஆண்டு காலமாக இந்தோனேஷியா பழமைவாத சிந்தனையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. ஒரு கால கட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமாகப் பார்க்கப்பட்ட வந்த அச்சே இன்று நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் பார்க்கப்படுகின்றது. எதற்கு? ஷரீஅத் சட்ட ஆணைகளைப் பிறப்பிப்பதற்காகத் தான்!  இது மதசார்பின்மையிலிருந்து இந்தோனேஷியாவைத் தடம் புரள வைத்து விடுமோ என்று மதச்சார்பின்மைவாதிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கின்றது.

அச்சே எப்போதெல்லாம் ஒரு ஷரீஅத் சட்ட ஆணையைப் பிறப்பிக்கின்றதோ அப்போதெல்லாம் மற்ற  மாநிலங்கெல்லாம் தாமும் அது போன்ற ஷரீஅத் சட்ட ஆணைகளைப் பிறப்பிக்கலாமே என்று  ஆர்வமும் ஆசையும் கொள்கின்றன என்றளவுக்கு அதன் செயல்பாடு உள்ளது என்று இந்தோனேஷியாவின் பெண்களுக்கு எதிரான வன்முறை கண்காணிப்பு ஆணையத்தின் முன்னாள் ஆணையர்  ஆண்டி எண்ட்ரியாணி கூறுகின்றார். ஷரீஅத் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட சில சட்டங்களை திரும்ப பெற வேண்டும். காரணம் அவை இந்தோனேஷியாவின் அரசியல் சட்டத்திற்கு எதிராக உள்ளன என்றும் அவர் கூறுகின்றார்.

மாநிலங்களும் மாவட்டங்களும் தங்களுக்கு அவசியமான சட்டங்களை தாங்களே இயற்றிக் கொள்ளலாம் என்று 1999ல் மத்திய அரசு அவற்றிற்கு முக்கியமான அதிகாரங்களை வழங்கியது. அன்றிலிருந்து இது வரை நாடு முழுவதும் 442க்கும் மேற்பட்ட ஷரீஅத் அடிப்படையிலான  ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று அண்மைக் கால ஆய்வு குறிப்பிடுகின்றது.

பழமை சிந்தனையை (இஸ்லாமிய ஷரீஅத் சட்ட அமைப்பை) தழுவிக் கொள்கின்ற புதுப் புது பகுதிகளில் உள்ள பிரதிநிதிக் குழுக்கள், அச்சே மாநிலத்தை நோக்கி வந்து அங்கு இஸ்லாமியச் சட்டம் எப்படி அமல்படுத்தப்படுகின்றது என்று பார்க்க வருகின்றனர்.  பாண்டா அச்சேவை நோக்கி பல்வேறு பகுதிகளிலிருந்து பல்வேறு குழுக்கள் படை எடுத்து வருவது உள்ளூர் அதிகாரிகளுக்குப் பெருமையாகவும் பெருமிதமாகவும் உள்ளது.

ஷரீஅத் சூழ்நிலையை எப்படி எளிதாக்கி தகவமைத்திருக்கின்றோம் என்று அக்குழுக்கள் இங்கு வந்து  ஆசுவாசமாகப் பார்க்கின்றனர். நாங்கள்  அவர்களிடம் ஷரீஅத் போதனைகளுக்கு எப்படி சட்ட வடிவு, வரைவாக்கம் கொடுப்பது என்று விரிவாக விளக்கிக் கூறுகின்றோம்என அச்சே அரசாங்கத்தின் ஷரீஅத் சட்டத்துறை தலைவர் சியாரிசல் அப்பாஸ் தெரிவிக்கின்றார்.  

கடுமையான விமர்சனக் கணைகளுக்குள்ளான சவூதி ஷரீஅத்தை விட்டும் இங்குள்ள ஷரீஅத் சட்டம் சற்று வித்தியாசமானது; வேறுபட்டது.   இது மாற்று சிந்தனைக் கருத்துகளையும் அரவணைக்கக் கூடியது. அத்துடன், இது, பெண்கள் தலைமை பொறுப்பு வகிக்கலாம் என்ற கண்ணோட்டத்தையும் கொண்ட ஒரு மிதமான ஷரீஅத் சட்டம் என்று மிதவாதி என கருதப்படக்கூடிய  சியாரிசல் அப்பாஸ்  கூறுகின்றார்.

இதற்கேற்ப, மாநிலத்தின் தலைநகரான பாண்டா அச்சேவின் மாநகராட்சியின் மேயராக இருப்பவரும் ஒரு பெண் தான். இவர் தான் முதல் மேயரும் ஆவார். அவர் பெயர் இல்லிசா ஸஆதுத்தீன் டிஜமால். இவர் முற்போக்குத் தலைவியாகச் செயல்படுவார் என்று தான் இவருக்கு  நாங்கள் வாக்களித்தோம். ஆனால், அதற்கு நேர்மாற்றமாக, அச்சேவின் பழமைவாத ஒழுக்க மாண்புகளை செயல்படுத்துவதில் பெரும் ஈடுபாடும் பேரார்வமும் கொண்ட பெண்மணியாக இருக்கின்றார் என்று   பெண்ணுரிமைப் போராளிகள்  அங்கலாய்த்துக் கொள்கின்றார்கள்.

முக்காடு அணிந்த முஸ்லிம் பெண்கள்

கடந்த ஆண்டு ஃபிப்ரவரியில் திருமதி இல்லிசா கருப்புத் தலை முக்காடு அணிந்து கொண்டு அழகுப் போட்டி நடந்து கொண்டிருந்த அரங்கிற்குள் நுழைந்து விட்டார். அழகிகளை கேமராக்களை வளைத்து வளைத்து படமெடுத்துக் கொண்டிருந்தன.  அரங்கில் நுழைந்த அவர், அழகிகளை நோக்கி, நீங்கள் ஏன் ஜில்பாப் (தலை முக்காடு) அணியக் கூடாது? என்று  ஒருத்தியைப் பார்த்து கேட்டார். ஷரீஆ காவல் துறை அலங்காரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசு கோப்பைகளை கோணிப் பைக்குள் வாரி போட்டு கொண்டு சென்றனர். அழகிகளை பாதுகாப்பாக வெளியே அனுப்பி வைத்தனர்.

இந்தோனேஷியாவிலிருந்து தனி நாடு கோரி  ஒரு பத்தாண்டுகள் பாண்டா அச்சா மாநிலம் போராட்டம் நடத்தியது. தனி நாடு கோரிக்கைக்கு மத்திய அரசு  பரிசாக  அளித்தது தான் ஷரீஆ சட்ட ஆட்சி. ஷரீஅத் சட்ட ஆட்சி அமுலுக்கு வந்ததிலிருந்து தனி நாட்டுக் கோரிக்கை 2005ல் முடிவுக்கு வந்தது. அச்சே மக்களிடம் தனி நாட்டுக் கோரிக்கைக்கான போர் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறாத வடுக்களாக இருந்து வருகின்றன.

அத்துடன், இந்தோனேஷியாவில் 2004ல் 230000 பேர்களை பலி கொண்ட சுனாமி ஆழி பேரலையும் அவர்களிடம் ஆறாத, அழியாத வடுக்களாகவே இருந்து வருகின்றன. இன்று அச்சே இந்தோனேஷியாவில் மிகவும் வறுமையான மாநிலமாகும்.

வரும் ஃபிப்ரவரியில் அச்சே மாநில மக்கள் தேர்தலைச் சந்திக்க உள்ளனர். மேயருக்கு அல்லது ஆளுநர் பதவிக்கு போட்டியிடக் கூடிய எந்த வேட்பாளரும் ஷரீஅத்தின் சட்டத்தின் இறையாண்மையை, அதன் மேலாண்மையை எதிர்த்து களங்காணப் போவதில்லை.


அரசாங்கம் கொஞ்சம் கூடுதலாகத் தான் போகின்றது என்று எண்ணி ஒரு பெருங்கூட்டம் உள்ளுக்குள்  நொந்து கொண்டிருந்தாலும் ஷரீஅத் சட்டத்தை எதிர்த்து இனி வாதம் பண்ணுவது சாத்தியமே இல்லை என்று அச்சேவின் மாநில சட்டமன்ற துணை சபாநாயகர் இர்வான் ஜான் தெரிவிக்கின்றார். அவர்களுக்கு எந்தத் துணிச்சலும் கிடையாது என்று ஷரீஅத் சட்ட விமர்சகர்களைப் பற்றி அவர் குறிப்பிட்டார். மத விவகாரங்கள் குறித்து பேசினால் ஒன்று  நீ நீக்கப்படுவாய் அல்லது உண்மையான அச்சே நாட்டுக்காரன் அல்லன் என்று முத்திரை குத்தப்படுவாய். அனைவரும் நயவஞ்சகர்களே என்று அவர் குறிப்பிட்டார்.

EGATHUVAM FEB 2017